மேஷம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். துணையுடன் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். குறைந்த அளவு பண வரவே காணப்படும். மேலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சில அசௌகரியங்கள் காணப்படும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். மேலும், பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சளி பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்திச் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். மேலும், புதிய வாய்ப்பும் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் பனி சம்மந்தமான பயணம் காணப்படும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். மேலும், ஊக்கத்தொகையும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறலாம். நீங்கள், எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், கவனமாகப் பணியாற்ற வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. மற்றவர்களுடன் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. பணியிடத்தில் சில தடைகளைச் சந்திக்க நேரிடும். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். அதிக அளவில் செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். இதனால் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கிறது. நீங்கள் செய்யும் சிறிய முயற்சியும் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்திப் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை பொறுத்தவரை சுமாராக இருக்கிறது. மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். பணியிடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால், கவனமாகப் பணியாற்ற வேண்டும். மேலும், திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணவரவு உங்களுக்குச் சாதகமாக இருக்காது. மேலும், பயணம் செய்யும்போது பண இழப்பு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீங்கள் எதிலும் பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். அதிக செலவுகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் கடினப்படுவீர்கள். துணையுடன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவீர்கள். இதனால் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். அதிக செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைக் காண்பீர்கள். பணியிடத்தில் வேலை சம்மந்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. நிதிநிலைமையை பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது. மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.