Lava Blaze 3:லாவா பிளேஸ் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்!

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்தப் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் 3 போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த 5ஜி போனில் ரிங் ஆஃப் லைட் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சங்கள்

6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 6300 ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
6ஜிபி ரேம்
128ஜிபி ஸ்டோரேஜ்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
5ஜி நெட்வொர்க்
டைப்-சி யுஎஸ்பி போர்ட்
5,000mAh பேட்டரி
18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
இந்தப் போனின் விலை ரூ.9,999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *