
Kushi 2023 movie | Vijay Deverakonda | Samantha Ruth Prabhu | Latest update
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள ‘குஷி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது...
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாகச் சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Kushi 2023 movie | Vijay Deverakonda | Samantha Ruth Prabhu | Latest update
இந்நிலையில், ‘குஷி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

