தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்!

Advertisements

Digital Personal Data Protection Bill | 2023 | Lok Sabha | Ashwini Vaishnaw

டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது...

புதுடெல்லி : மணிப்பூர் வன்முறை தொடர்பாகப் பிரதமர் மோடி பதில் அளிக்கக் கோரி மக்களவை தொடங்கிய நாளிலிருந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த அமளிகளுக்கு இடையே சில மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மக்களவை வழக்கம்போல் கூடியது. மக்களவை தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவையை மதியம் 12 மணிவரை ஒத்திவைத்துச் சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையும் அமளி காரணமாகப் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Digital Personal Data Protection Bill | 2023 | Lok Sabha | Ashwini Vaishnaw

இந்த நிலையில் மக்களவை மீண்டும் கூடியது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *