
ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடபணிக்கு பூமி பூஜைசெய்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழ்பென்னாத்தூர் கருங்காலிகுப்பம், ராஜாதோப்பு, நெடுங்காபூண்டி, மேட்டுபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் புறங்களில் உள்ள கிராமங்களிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்குத் தங்களுடைய நோய் தீர்ப்பதற்காக வந்து செல்கின்றனர்.
இங்குக் கர்ப்பிணி பெண்களுக்குப் பரிசோதனை கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்யும் வசதி பிரசவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்கு போதிய கட்டிட வசதிகள் இல்லாததால் தமிழக முதல்வர் மு. . ஸ்டாலின் அறிவுரைத்தலின்படி பொதுத்துறை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் வழிகாட்டுதல்படி இன்று ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், நகர செயலாளர் அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


