Kuwait : ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.!

குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் குவைத் நாட்டின் எரிசக்தி அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், குவைத் நாட்டின் எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டிடம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆலைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தொடர்ந்து தொழில் நுட்பம் மற்றும் அவசரகால குழுக்களை சேர்ந்தவர்கள் உடனடியாக சென்று, சம்பவத்திற்கு பின்னர் ஆலையை மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *