நட்டி நட்ராஜ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

பிரபல நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘தங்க நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல நடிகர் நட்டி நட்ராஜ் ‘தங்க நட்சத்திரம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் உமாபதி இயக்கத்தில் இசையமைப்பாளர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரசியல் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில் நடிகர் நட்டி நட்ராஜின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *