Kuthukalwalasai Panchayat: பஞ்சாயத்துதலைவர் கைது!

Advertisements

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய  திடீர் சோதனையில்  திமுகவை சார்ந்த பஞ்சாயத்துதலைவர்சத்யராஜ் மற்றும் சௌந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவரது மகன் ரஜினி பாபு. இவர்  தனது அத்தை மகள் வெளிநாட்டில் கணினி பொறியாளராகப் பணியாற்றி வரும் வந்தனா என்பவருக்குச் சொந்தமாகத் தென்காசி குத்துக்கல்வலசை ராஜா நகர் பகுதியில் மூன்று சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக நிலத்திற்கு அனுமதி வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதில் நிலத்திற்கு அனுமதி வழங்குவதற்காகக் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜைஅணுகியுள்ளார். அவர் புரோக்கர் சௌந்தர் என்பவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 46 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகப் பேசி 6000 ரூபாய் குறைத்து 40 ஆயிரம் ரூபாய் இன்று ரெஜி நியூஸ் பாபுவிடம் சௌந்தர் என்பவர் வாங்கி தலைவர் சத்யராஜ் இடம் வழங்கும்பொழுது தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாலசுத்தர் தலைமையிலான ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ உதவி ஆய்வாளர் ரவி உள்ளிட்ட குழுவினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவைச் சார்ந்த சத்யராஜ் மற்றும் சௌந்தர் ரெண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *