Tenkasi : தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!

சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தடுக்காத தி.மு.க.அரசை கண்டித்தும், தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையிலும். தென்காசியில். அ.தி.மு.க.சார்பில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, வயது வரம்பின்றி போதை பொருட்களின் புழக்கம் என பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு, தி.மு.க. – விடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில், அ.தி.மு.க, சார்பில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்கின்ற குட்டியப்பா, பா.ம.க தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணை செயலாளர் சேது. அரிகரன், மாவட்ட தலைவர் குலாம், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், பா.ம.க ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தி.மு.க. அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *