E. V. Velu: திமுக ஆட்சியில் பால் உற்பத்தியில் மூன்றாம் இடம்!

Advertisements

திருவண்ணாமலை மாவட்டம் பால் உற்பத்தியில் தமிழகத்திலேயே மூன்றாம் இடத்தில் உள்ளது -அதனால் தான் கடந்த திமுக ஆட்சியில் பால் உற்பத்தி விவசாயிகள் பயனடையும் வகையில் சுமார் 40 கோடி ரூபாய் அளவில் பால் பவுடர் உற்பத்தி தொழிற்சாலையைத் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திமுக அரசு கொண்டு வந்தது-புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்துப் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள ஆவின் வளாகத்தில்புதிய நிர்வாக அலுவலக கட்டடம் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் ஆகியவற்றினைபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.

இதனையடுத்து ஆவின் வளாகத்தில் புதிய நிர்வாகக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பால் உற்பத்தியில் தமிழகத்திலேயே மூன்றாம் இடத்தில் உள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உயர் ரக கறவை மாடுகளை மானியத்தில் அளித்து அதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்கினால் திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாம் இடத்திலிருந்து முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும் என்றும், இதற்குப் பால் உற்பத்தியாளர் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திமுக அரசு செய்யும் என்றும் உரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை 522 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆண்டுக்கு 22.42கோடி ரூபாய் அளவிற்கு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் இது மட்டுமில்ல அது மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் அனக்காவூர்  ஆகிய பகுதிகளில் இரண்டு பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் இந்தப் பால் குளிரூட்டும் நிலையங்களை அமைத்துத் தந்ததும் திமுக அரசு தான் என்றும், திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆண்டு ஒன்றிக்கு  300 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்து வருவதாகவும், இதன் அடிப்படையில் தான் இன்று ஆவின் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலு தெரிவித்தார்.

மேலும் அதிக அளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் இருந்த நிலையில் அவர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் பவுடர் தொழிற்சாலை அமைய வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி இடம் கோரிக்கை வைத்ததில் பேரில்தான் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட அம்மா பாளையத்தில் சுமார் 40 கோடி ரூபாய் அளவில் வால் பவுடர் உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்கிக் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் தற்போதைய முதலமைச்சர் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார் என்றும் இதனால்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பயன் அடைந்தார்கள் என்றும் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈவேரா மணியம்மை நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண திருமண நிதி உதவி திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டம் ஆகிய நான்கு வகையான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் சுமார் 967 நபர்களுக்குத் தங்க நாணயங்கள் மற்றும் 50 ஆயிரம் மட்டும் 25 ஆயிரம் ரூபாயென 8 கோடியே ஆறு லட்சத்து 94 ஆயிரத்து 505 ரூபாய் அளவிற்கு நிதி உதவி மேலும் 142  க்கு வீட்டுமனை பட்டா ஆகியவற்றை அமைச்சர் வேலு அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதனை அடுத்து திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள் கலைஞன் நூற்றாண்டு விழாவினையயொட்டி அமைக்கப்பட்ட கலைஞர் நூலகம் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *