Kunnamthanam Murder: மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை!

Advertisements

மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.

வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகள் ஸ்ரீஜாவுடனே வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த வேணு, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்பு அவர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார்.


ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கீழ்வாய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு திருவல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

ஸ்ரீஜா உடலில் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. கணவன்-மனைவி இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரால் கொல்லப்பட்ட ஸ்ரீஜா, தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *