Manisa Tait: தமிழில் நடிக்கும் பிரெஞ்சு நடிகை!

தமிழில் நடிக்கும் பிரெஞ்சு நடிகை! மனீஷா டெய்ட்.

சென்னை: ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வெங்கடேஷ் குமார்.ஜி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய படம், ‘எ ஹோம் அவே ஃப்ரம் ஹோம்’. இதில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நடித்த பிரெஞ்சு நடிகை மனீஷா டெய்ட் ஹீரோயினாக நடித்துள்ளார். மற்றும் அனீஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளனர்.
சஹாரா ஏஷியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உமா பாலு கதை, பாடல் எழுதி தயாரித்துள்ளார். பிரபு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, எழில் துரை இசை அமைத்துள்ளார். ஆதிவாசிகளின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாட்டுக்கு வரும் ஜெர்மனியைச் சேர்ந்த கரோலின் என்ற ஆராய்ச்சியாளர், நாளடைவில் ஆதிவாசி இளைஞன் ஒருவனை தீவிரமாக காதலிக்கிறார்.

இதையடுத்து அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களைப் பற்றி படம் சொல்கிறது. நார்வே திரைப்பட விழாவில் 4 விருதுகள் பெற்றுள்ள இப்படம், மேலும் சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள தமிழ்ப் படமான இது, அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *