
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணாவைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே, கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா வழக்கறிஞர்கள் குழுவுடன் காவல்நிலையத்தில் ஆஜரானார்.
அவரிடம் போதைப்பொருள் விற்பனை செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப் உடனான தொடர்பு பற்றி 24 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது, தனக்கு இரைப்பை பிரச்சினை இருப்பதாகவும், அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்றும் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிந்தடிக் டிரக்ஸ் எனப்படும் உயர் ரக போதைப்பொருட்களை உபயோகப்படுத்தும் அளவிற்கு தனது உடல்நிலை இல்லை என்று கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது. ஆனால், நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், அவரது நண்பர்கள் சிலரிடமும் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் விசாரணைக்கு பிறகு கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

