krishnagiri:தம்பி மனைவியை மடக்க நினைத்த அண்ணன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisements

கிருஷ்ணகிரி அருகே அண்ணனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்து உடலைச் சாக்கு பையில் மூட்டையாகக் கட்டி பாழடைந்த கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(30). திருமணமான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மூர்த்தியின் அண்ணன் பாபு(32) திருணமாகாத இவர் கோவையில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். கோவையில் இருந்த சொந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்த சென்ற பாபு தனது தம்பி மனைவி மஞ்சுளா மீது காம பார்வை வீசியதுடன் சில்மிஷம் செய்து, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதுகுறித்து மஞ்சுளா தனது கணவர் மூர்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா தனது மகளைக் கடந்த 3 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த மூர்த்தி இதற்கெல்லாம் காரணம் அண்ணன் பாபு தான் நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மூர்த்தி, தடியால் சரமாரியாக அண்ணன் பாபுவை தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் பாபுவை கொன்று சாக்கு பையில் கட்டி வீட்டிற்கு அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார். நாளடைவில் உடல் அழுகி தூர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணையில் நடத்தியதில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த பாபுவின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் அண்ணனைக் கொலை செய்த தம்பி மூர்த்தியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சேலம் சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *