பப்களில் தொடங்கிய தகராறு..FIR-ல் பாய்ந்தது BNS 103 கொ*லை வழக்கு.!!

Advertisements

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு (மே 30), இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் யான்சி (18) என்பவர் மீது சொகுசு கார் (SUV) மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலில் இது சாதாரண சாலை விபத்து என நினைத்த கோயம்பேடு போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபாரில் (Bar) நடனமாடும் போது ஏற்பட்ட தகராறில், ஒரு கும்பல் அந்தப் பெண்ணை முதலில் தாக்கிவிட்டு, பின்னர் அவர் வீட்டிற்குத் திரும்பும்போது காரை ஏற்றிப் படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் உட்பட இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை விபத்து வழக்கிலிருந்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS) புதிய சட்டத்தின் கீழ் 4 கடுமையான பிரிவுகளுக்கு மாற்றி போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *