மெகாஸ்டார் தொகுதியாக திருச்சி கிழக்கு.. களமிறங்க போவது யார் யார்?

Advertisements

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கவனத்தை ஈர்க்கும் தொகுதியாக உருவெடுத்துள்ளது  கொளத்தூர் மற்றும் திருச்சி கிழக்கு….முன்னாள் தமிழக முதல்வராக இருந்த முக ஸ்டாலினை வேரோடு வீழ்த்தி தனது முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியடைந்து அந்த தொகுதியில் கால் பதித்திருக்கிறது தமிழக வெற்றி கழகம்.

அடுத்ததாக திருச்சி கிழக்கு..தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அறிமுக விழாவின் போது திருச்சி கிழக்கு என்று விஜய் சொன்ன கணமே அரங்கு அதிரும் அளவிற்கு சத்தம் வந்தது வேட்பாளர் சி.ஜோசப் விஜய் என்பதனால்…அந்த ஆரவாரத்திற்கு ஏற்றவாறே திருச்சி கிழக்கில் வெற்றியும் பெற்றார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்,அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர்  தோல்வியடைந்தனர்.

இனிகோ இருதயராஜ் யாரென்று தெரியாத மக்களுக்கும் கூட, அவரே ஒரு பேட்டி அளித்து தெரியவும் படுத்தியிருப்பார்.
“விஜய்க்கு தெம்பும் திராணியும் இருந்தால் இங்கே திருச்சி கிழக்கிலே என்னோடு மோத சொல்லுங்கள்” என்று சவால் விடுத்திருந்தார்.
தேர்தலுக்கு பிறகு முதல்வர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

இருந்தாலும் ஒரு தொகுதியை தான் தக்க வைக்க முடியும் என்பதால் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். தற்போது அந்த தொகுதி காலியாக இருக்கிறது. இந்த நிலையிலதா திருச்சி கிழக்குல வரவிருக்கும் இடைத்தேர்தலில் எந்தெந்த  கட்சிகளில் இருந்து யார் போட்டியிட போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்த சூழல்லதா திமுக சார்பில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது பெறும் பேசுபொருளாக இருக்கிறது.
அந்த வகையில கட்சிக்குள் இருக்கும் பல தலைகளும் திருச்சி கிழக்கில் களமிறங்க விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் இனிகோ இருதயராஜ் இவர்கள் மட்டுமில்லாம திமுக தலைவர் முக ஸ்டாலினே போட்டியிட போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருச்சி கிழக்கில் விஜயின் வெற்றி சொல்வது என்ன? இத்தனை வருடம் தன்னை விஜய் என்று சொல்லிக்கொண்டு திடீரென தன்னை ஜோசப் விஜய் என அறிமுகப்படுத்தி கொள்கிறார். இது கிறிஸ்தவ மக்களுடைய அத்தனை வாக்கையும் பெறுவதற்காக தான் . இது ஒரு அரசியல் யுக்தி என்று பலரும் விமர்சித்தார்கள்.

இதை சரியாக சொல்லவேண்டும் என்றால், திருச்சி கிழக்கில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் ஒரு தூய கிறிஸ்தவர் தான். அவரை புறக்கணித்த மக்கள் ஜோசப் விஜயை மட்டும் எப்படி வெற்றிபெற வைத்தார்கள் என்று அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதை தொடர்ந்து தவெக சார்பாக திருச்சி கிழக்குல அதிமுக முன்னாள்  அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான கு.ப. கிருஷ்ணன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர். இவர் தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுளார். இதனால் போட்டியில் இவரும் அவுட்…

இந்த நிலையிலதா முன்னாள் IAS அதிகாரி சகாயம் திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. நிர்வாக திறமை,சமூக அக்கறை, எந்த வித அரசியல் கரையும் இல்லாமல் இருக்கும் ஒரு நல்ல ஆளுமையை களம் காண வைக்க தவெக தலைமை ஒரு கணக்கு போடுகிறது என்கிறார்கள்.

திருச்சி கிழக்கு தொகுதி தவெக தலைவர் விஜய் நேரடியாக நின்று வென்ற தொகுதி. இங்கு மீண்டும் வென்று தவெக வின் அரசியல் முகவரியை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திமுக, அதிமுக கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் விட்டதை பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் தங்களது முழு பலத்தையும் பிரயோகிக்க தொடங்கி விட்டார்கள்.

அதிர்ஷ்ட காற்று இந்த முறை தவெக வின் பக்கம் வீசுமா?
மெகா ஸ்டார் தொகுதியில் களமிறங்க போகும் இடைத்தேர்தல் ஸ்டார்கள் யார் யார்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *