Advertisements
சென்னை:
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பது,
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடிதம் வழங்கியிருந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங்குக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.