முப்படைகளின் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி..!

Advertisements

இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

 இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி இன்று புதிய தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றுக் கொண்ட பின், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ஆயுதப் படைகளின் மீது, நாடு வைத்துள்ள நம்பிக்கைக்குத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நமது பிரதமரின் ஜெய் – கூட்டுத்தன்மை, தற்சார்பு, புதுமை ஆகிய தொலைநோக்குச் சிந்தனைகளைச் செயல்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும், இந்திய ராணுவக் கட்டமைப்பில் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மேம்படுத்துவதே தனது முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *