Korukkupet: பீர் பாட்டிலால் தாக்கிய இரண்டு வாலிபர்களுக்குச் சிறை!

Advertisements

கொருக்குப்பேட்டையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கிய இரண்டு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் நிதிஷ் என்பவர் வசித்து வருகிறார். நிதிஷ் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம்  சில மாதங்களுக்கு முன்னர் ரூபாய்4000 கடனாக வாங்கி உள்ளார். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு நிதிஷ்  பாலாஜி இடம் கடனாக வாங்கிய 4000 ரூபாய்க்கு 3000 மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நிதிஷ் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலாஜி மற்றும் அவரது நண்பர் கணேஷ் என்ற பப்லு ஆகிய இருவரும் மீதி  கடன் தொகை ஆயிரத்தை கேட்டுத் தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பாலாஜி அவருடைய நண்பரும் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து  நிதிஷ்சை தாக்கியுள்ளனர். காயமடைந்த நிதிஷ்சை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாகக் கொருக்குப்பேட்டை எச்4 போலீசார் விசாரணை செய்ததில் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கணேஷ் என்ற பப்லு இருவரையும் விசாரணை செய்தனர். விசாரணையில் பாலாஜி மீது ஐந்து வழக்குகளும் கணேஷ் என்ற பப்லு மீது எட்டு வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *