Chennai Metro: இனி வரிசையில் நிற்க வேண்டாம்!

Advertisements

இன்று முதல் சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் பயணச்சீட்டு பெரும் வசதி அறிமுகப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி வழியாக க்யூஆர் பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை: இன்று முதல் சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் பயணச்சீட்டு பெரும் வசதி அறிமுகப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி வழியாக க்யூஆர் பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். மெட்ரோ ரயில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பு, வேலை என அனைத்திற்கும் மெட்ரோ ரயில்களை நம்பி இருக்கின்றனர். மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்த இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 61 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 116.1 கி.மீ. தொலைவில் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலி வழியாக க்யூஆர் பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய வசதி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *