சென்னையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த மாதம் இறுதியில் விலை சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வைக் காணத் தொடங்கியுள்ளது.

 

நேற்று சவரனுக்கு ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக உயர்ந்து ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல், கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400 ஆக உள்ளது.

 

தங்கம் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

 

ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.250-க்கும், பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *