Kalanidhi Veeraswamy: ரூபாய் 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டல்!

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணியினை அடிக்கல் அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பூங்காவில் சிறிய நூலகத்தையும் திறந்து வைத்தார். அங்குள்ள பள்ளி மாணவிகளுக்குக் காமராஜரின் பற்றிய வரலாறு புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வழங்கினார்.

சென்னை, திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 50 லட்சம் மதிப்பில் மண்டலம் ஒன்று வார்டு 5 நகர் எம்ஆர்எப் சக்திபுரம் பூங்கா மற்றும் இரு இடங்களில் பூங்காக்கள் மேம்படுத்தும் பணியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பூமி பூஜை போட்டுத் துவங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பூங்காவில் சிறிய நூலகத்தையும் திறந்து வைத்தார். அங்குள்ள பள்ளி மாணவிகளுக்குக் காமராஜரின் பற்றிய வரலாறு புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வைமா அருள்தாசன், மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம், அயலாக அணி தலைவர், எஸ்.டி. சங்கர், பாலா உமாபதி, விஜயராகவன், வழக்கறிஞர் குறளரசன், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *