
கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் அமைச்சர் சேகர் பாபு தான் என்று அந்தக் கட்சியின் எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் எக்ஸ் தளத்தில் போஸ்ட் செய்திருப்பது திமுகவுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு….
2021 சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பரந்தாமனுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்புத் தரவில்லை. இவருக்கு சீட் கிடைக்காமல் போனதற்குக் காரணம் சேகர்பாபு தான் என்று சொல்லப்பட்டது.இந்த நிலையில்தான் 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குச் சாதகமாக அமையவில்லை..
திமுக நிறைய தொகுதிகளை இழந்து எதிர்க்கட்சி வரிசைக்கு போயிருக்கு. நடிகர் விஜயின் தவெக ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் வெளிவந்த ஒரு செய்தி, திமுகவினருக்கு மட்டுமல்ல… தமிழக மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றதுதான்.
ஸ்டாலினை பொறுத்தவரை தனது கொளத்தூர் தொகுதியை கண்ணும் கருத்துமாக கவனிச்சு வந்தாரு. எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு தனது கொளத்தூர் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பார்த்து பார்த்து செய்தார். சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாலங்கள், வேறு எங்கோ போகவிருந்த மெட்ரோ வசதியை கொளத்தூருக்குக் கொண்டு வந்தது,
கொளத்தூர் பஸ்நிலையத்துக்கு ஏ.சி வசதி செய்து கொடுத்தது என பல்வேறு வசதிகளை ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை எதிர்க்கட்சியினரே பாராட்டியிருப்பதாக சொல்றாங்க..கடந்த 15 ஆண்டுகளாக மூன்று முறை வெற்றி வாகை சூடிவந்த ஸ்டாலின், இந்த முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த கொளத்தூர் தொகுதியை தவெக கைப்பற்றியது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொளத்தூர் தொகுதி மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்றிருந்த மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிச்சு தமிழ்நாடு முழுவதும் கேன்வாஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவரால் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் கான்சன்ட்ரேட் செய்ய முடியாமல் இருந்தது.
அதனால் கொளத்தூர் தொகுதியை சேர்த்து கவனிச்சுக்கிறேன் என்று சொல்லியிருக்காரு. ஆனால் சேகர்பாபு கொளத்தூர் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்பதால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தோற்றார் என்று எக்ஸ் தளத்தில் பரந்தாமன் பதிவிட்டுள்ளார்.
அதுல, “எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை. இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியல் தலைவர். யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்! குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்.
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு என்று சேகர்பாபுவை டேக் செய்துள்ளார்.
மேலும் அவர், என் தலைவர் தோல்வியை தான் என்னால் தாங்கமுடியவில்லை. சாதாரணமாக கடந்துச்செல்லவும் முடியவில்லை உரியவர்கள் பொறுப்பேற்க்கவேண்டும்” என்று பரந்தாமன் பதிவிட்டுள்ளார். ஒரு பெரிய கட்சி தேர்தலில் தோற்றால் உள்கட்சிக்குள் சர்ச்சைகள் வெடிக்கும் என்பது இயல்பான ஒன்றுதான். என்றாலும் அதை முற்றவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்த திமுகவுக்கு தெரியாதது இல்லை… ஏ
னென்றால் தேர்தல் அரசியலில் இதற்கு முன்னாள் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவை உருவாக்கி முதன்முதலமாக தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தார். அதன்பிறகு, திமுகவில் இப்போது ஏற்பட்டதை விட மிகப் பெரியளவில் பூகம்பமே ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டில் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு மிசா என்ற கொடூர சட்டத்தின் கீழ் பல ஆயிரம் திமுக தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளானார்கள்.
அந்தக் கொடுமை தாங்க முடியாத திமுகவினர் உயிரை இழந்தனர். அப்போதும் திமுகவுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள் பலர், இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சையோ அல்லது இதற்குப் பிறகு ஏற்படவிருக்கும் எந்த ஒரு குழப்பமோ பெரிய விசயமில்லை என்கின்றனர். .



