ஸ்டாலினை கவிழ்த்த பிரேமலதா ராசி.. உருவாகும் உட்கட்சி மோதல்.!

Advertisements

தமிழக தேர்தல் முடிவு வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவாலயம் வந்தபோது அங்கிருந்த காட்சி காண்போரை கலங்கச் செய்தது. எப்போதும் சுறுசுறுப்பாகவும், புன்னகையுடனும் தொண்டர்களைச் சந்திக்கும் ஸ்டாலின், நேற்று மிகுந்த சோர்வுடனும், வாடிய முகத்துடனும் காணப்பட்டார். தோல்வியின் துயரம் அவரது நடையிலும், தோற்றத்திலும் அப்பட்டமாகத் தென்பட்டது.

தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த தமிழக வெற்றிக் கழகம் தற்போது 108 இடங்களைக் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாகப் பார்க்கப்படுவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தோல்விதான்.

1954 -1963 ம் ஆண்டு காலகட்டத்தில், தொடர்ந்து மூன்று முறை, காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த காமராஜர், 1967ம் ஆண்டு  தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தி.மு.க,வின் சீனிவாசனிடம், 1,285 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.1996ம் ஆண்டு ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூரில் தோற்கடிக்கப்பட்டார். 1988ல், 23 நாட்கள், அ.தி.மு.க., சார்பில் முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, 1989 தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில், தி.மு.க.,வின் ஆசியனிடம், 4,221 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

1963 – 1967 ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த பக்தவச்சலம், 1967ல் ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், தி.மு.க.,வின் ராஜரத்தினத்திடம், 8,926 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது, அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் இணைந்துள்ளார். இவரின், தந்தை கலைஞர் கருணாநிதி தேர்தலில் தோவ்ல்வியை சந்தித்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக வெற்றி வாகை சூடி வந்த ஸ்டாலின், இந்த முறை தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து மு.க. ஸ்டாலின் இங்கு தோல்வியையே சந்தித்ததில்லை.

2011-ல் அதிமுகவின் சைதை துரைசாமியை எதிர்த்துப் போட்டியிட்டபோது சற்று கஷ்டப்பட்டு ஆனால் வெற்றி பெற் விட்டார். பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் முறையே 37,000 மற்றும் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அத்தொகுதியைத் தனது தனிப்பட்ட செல்வாக்கின் அடையாளமாக மாற்றியிருந்தார். ஆனால், இந்த முறை தவெக-வின் எழுச்சி அவரது கோட்டையைத் தகர்த்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்து வந்தது திமுக தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இறுதியில் வி.எஸ். பாபுவின் வெற்றி உறுதியானபோது, அது திமுகவின் ஒட்டுமொத்த தேர்தல் வியூகத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வழக்கமான ஆரவாரம் இன்றி அமைதியாக இருந்தது.

எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் அளவிற்கு இடங்களைப் பிடித்திருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்து இத்தகைய பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது அக்கட்சியினரை நிலைகுலையச் செய்துள்ளது.குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவாலயம் வந்தபோது அங்கிருந்த காட்சி காண்போரை கலங்கச் செய்தது.. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும், நட்சத்திரத் தொகுதியில் முதலமைச்சரே தோல்வியடைந்தது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வின் புதிய அரசியல் முழக்கமும், இளைஞர்களின் ஆதரவும் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 72 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்தாலும், தற்போதைய தோல்வி என்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், திமுகவின் தோல்விக்கு தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலில்  தேமுதிக 10 இடத்தில் போட்டியிட்டது. ஆனால், பிரேமலதா மட்டுமே விருதாசலத்தில் வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயபிரபாகரன் விருதுநகரில் தோல்வி கண்டுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மீதியுள்ள 8 தேமுதிக வேட்பாளர்களுமே தோல்வியைச் சந்திதுள்ளனர். தேமுதிகவுக்கு மற்றொரு ராசியும் உள்ளது. இந்த கட்சி கூட்டணி சேருமிடமெல்லாம் தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது, மட்டுமே தேமுதிக வெற்றி கண்டுள்ளது. அதற்கு பிறகு, எந்த தேர்தலிலும் இந்த கட்சி இருந்த கூட்டணி பெரியதாக வெற்றி பெற்றதில்லை. இந்த ராசிதான் திமுகவை தோல்வியடைய செய்ததாக திமுக தொண்டர்கள் குமுறுகின்றனர்.

மக்களின் இந்தத் தீர்ப்பு, பாரம்பரியக் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், புதிய மாற்றத்தை விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. கோட்டையை இழந்த அதிர்ச்சியில்  திமுக இருந்தாலும், மக்கள் வழங்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கொண்டு அக்கட்சி எவ்வாறு மீண்டெழப் போகிறது என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *