
தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அந்தக் கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். சென்னைப் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலைத் தலைவர் விஜய் வெளியிட்டார். அப்போது சென்னைப் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக அவர் அறிவித்தார்.
தியாகராயரில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தும், மயிலாப்பூரில் பொருளாளர் வெங்கட்ரமணனும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும் தவெக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையனும், திருச்செங்கோட்டில், அருண்ராஜும், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமாரும் போட்டியிடுகின்றனர்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு போட்டியிடுகிறார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை எதிர்த்துச் செல்வம் போட்டியிடுகிறார்.


