
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்..
ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவும் , அதனையடுத்து முனுகப்பட்டு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும் , அருள்மிகு ஸ்ரீ ராதாருக்மணி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா என மூன்று கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் , முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் இராமச்சந்திரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார் மேலும், கோவில் கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.





