
பியூட்டி பார்லரில் பணி புரியும் பெண்ணை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருவண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை நகரில் உள்ள முத்துவிநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் சுதா என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகி கணவர் இல்லாத நிலையில், கடந்த இரண்டு வருடமாகச் சின்னகடை தெருவில் உள்ள ஜோஷினி பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்த சுதா கடையில் அமர்ந்து கொண்டிருந்த வேலையில் திடீரெனக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பூ வெட்டும் கத்தியால் சுதாவை சரமாரியாக வெட்டிய நிலையில் சுதா கதறியதையடுத்து மர்ம நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த சுதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
பியூட்டி பார்லர் பணி புரியும் பெண்ணை மர்ம நபர் கத்தியால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

