Tamilnadu: ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறுநீரகம் வேண்டிக் காத்திருப்பு !

தமிழ்நாட்டில் ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறுநீரகம் வேண்டிக் காத்துக்கொண்டிருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உடல் உறுப்புக் கொடை வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக எண்ணிக்கையில் உறுப்புக் கொடைக்கான உறுதிமொழிகளைப் பெற்று உலகச் சாதனை படைத்த கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முயற்சிக்கு வேர்ல்ட் ரெகார்ட்ஸ் யூனியன் அமைப்பு சான்று அளித்துள்ளது. சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்ரமணியன், தமிழ்நாட்டில் சிறுநீரகம் வேண்டி ஏழாயிரத்துக்கு மேற்பட்டோரும், கல்லீரல் வேண்டி 470 பேரும் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *