
தீபாவளியையொட்டி அக்.30-ல் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துப் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 31-ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களின் வசதிக்காகத் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1-ஆம் தேதி ஏற்கெனவே அரசு விடுமுறை அளித்துள்ளது.
இந்த நிலையில், கடைசி நேரக் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முந்தைய நாளான அக். 30-ம் தேதி புதன்கிழமையும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் மாவட்டங்களுக்குப் பொது விடுமுறை அளித்துத் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுப் பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்.30-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் (16-ம்தேதி )சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


