முன்னாளைய சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்றிருந்த குடியரசு நாடுகளான ஆர்மீனியாவும், அசர்பைஜானும் அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன. முன்னாளைய சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்றிருந்த ஆர்மீனியாவும், அசர்பைஜானும் அருகருகே இருந்தாலும் அவற்றுக்கிடையே எல்லைத் தகராறு நாற்பதாண்டுகளாக இருந்து வருகிறது. அசர்பைஜான் நாட்டில் உள்ள ஆர்மீனியர்களின் பழைமை வாய்ந்த குடியிருப்பான நாகர்னோ கரபாக் தொடர்பாக இரு நாடுகளும் சண்டையிட்டு வந்தன.
இரு நாடுகளும் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நியூயார்க்கில் அசர்பைஜான் அதிபர் இல்காம் அலியேவ், ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பசினியன் ஆகியோர் இடையே அமைதி உடன்பாடு கையொப்பமானது. அதன்பின் இருவரின் கைகளையும் டிரம்ப் சேர்த்து வைத்தார்.
அவர்கள் கைகுலுக்கிக் கொண்டது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று டிரம்ப் வருணித்தார்.
இரு நாடுகளிலும் போக்குவரத்துக்கான தடங்களைத் திறப்பது, வணிகம், அரசு முறைத் தொடர்புகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த உடன்பாட்டில் அடங்கும்

