Khalistan movement: பிரதமர் மோடியின் புகைப்படம் எரிப்பு!

Advertisements

கனடா நாட்டின் டொராண்டோ மாகாணத்தில் ஒட்டாவா நகரத்தில் இந்தியா தேசியக் கொடியை எரித்தும், மோடியின் புகைப்படத்தை எரித்தும், காலிஸ்தான் தனி நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடா: காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,  இந்தியாவுக்கு  எதிராகப் பிரிவினைவாத செயல்களீல் ஈடுபட்டதைத்  தொடர்ந்து,  கனடாவில் வசித்து வந்த  நிஜ்ஜார் மற்றும் சுக்னே துங் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு  இந்தியாவை சம்மந்தப் படுத்தி குற்றம் சாட்டியது.

இந்நிலையில் சீக்கியதலைவர் சொத்துக்கள் மட்டுமல்லாது, மேலும் 19 பேரின் சொத்துக்களும் முடக்கப்படும் என  அறிவித்தது.கனடா இந்தியாவுக்கு எதிரான  பிரிவினைவாதிகளுக்கு  அடைக்கலம் கொடுப்பதோடு, முழு ஆதரவும் கொடுப்பதால், கனடாவுக்கான விசா நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கு  எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். டொராண்டோ மாகாணத்தில் ஒட்டாவா நகரத்தில் இந்தியா தேசியக் கொடியை எரித்தும், மோடியின் புகைப்படத்தை எரித்தும், காலிஸ்தான் தனி நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடாவுக்கான  விசாவை நிறுத்தியதே போராட்டதிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *