வாலாஜாபாத் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த அரிசி ஆலை உரிமையாளரிடம் விலாசம் கேட்பது போல் தடுத்து நிறுத்தி ‘கத்தி முனையில் மிரட்டி’ டெபிட் கார்டை பறித்து ஏடிஎம் மிஷினில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்த 3 இளைஞர்கள்.வழிப்பறி செய்தவர்களின் அனைத்து விபரங்களும் தெரிந்தும் காவல்துறையினரின் மெத்தனத்தால் கல்லூரி மாணவர் ஒருவர் மட்டுமே சிக்கினார் . தலை மறைவான இருவருக்கு வாலாஜாபாத் காவல் துறையினர் வலை வீச்சு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை கலாச்சாரம் எப்படி அதிகரித்து வருகின்றதோ அதேபோல வழிப்பறி கொள்ளை திருட்டு ரவுடிசம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெற்று வருகின்ற, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட எந்த சமூக விரோத செயல்களும் வெளியே கசிந்து விடக்கூடாது, அதிலேயும் நியூஸ் ஜெ செய்தியாளருக்கு தெரியவே கூடாது என்பதில் மிக வலுவான கட்டுப்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் , அதன்படி காவல் ஆய்வாளர்கள் நடந்து கொள்கின்றார்கள் என காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் (வயது 48) அரிசி ஆலை வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் வாலாஜாபாத் அருகே உள்ள கிரிதிப்பேட்டை கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது மூன்று வாலிபர்கள் இவரை தடுத்து நிறுத்தினார். அவரிடம் விலாசம் கேட்பது போல் பேசிக்கொண்டே இருந்து கத்தியை எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிய போது ஏடிஎம் டெபிட் கார்டை வெங்கட் இடமிருந்து பறித்துள்ளனர். இரண்டு நபர்கள் வெங்கட்டை பிடித்து வைத்துக்கொள்ள கிதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ்வரன் இடம் டெபிட் கார்டுயை கொடுத்து கட்டவாக்கம் ஜங்ஷனில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்க்கு அனுப்பி பணத்தை எடுத்து கூறினார் .விக்னேஷ்வரன் ஏடிஎம்க்கு சென்றவுடன் மற்ற இரண்டு நபர்கள் வெங்கட் இடம் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை கேட்டு சொல்ல 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விக்னேஸ்வரன் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.பணம் வந்தவுடன் மடக்கி வைத்திருந்த வெங்கட் விடுவிக்கப்பட்டார். இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என 3 பேரூம் மிரட்டி விட்டு தலைமறைவாகினர்.பின்னர் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வெங்கட் புகார் அளித்ததன் என்பதில் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் கிதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஸ்வரன் என்பவரை மட்டும் கைது செய்தனர் . விக்னேஸ்வரனின் வீட்டு அருகே உள்ள மற்றொரு நபரும் அவருடைய இன்னொரு நண்பரும் தலைமுறைவாகியுள்ளனர் . அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் சங்கர் அவர்களிடம் கேட்டபோது எந்த பதிலையும் அளிக்கவில்லை. காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட யாரும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். அதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆய்வாளர் சுந்தர்ராஜ் என்பவர் இது குறித்து *டெய்லி ஸ்டேஷன் ரிப்போர்ட்* அதில் கூட குறிப்பிடவில்லை. இதுபோல கஞ்சா வழிப்பறி திருட்டு கொள்ளை உள்ளிட்ட பல விஷயங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செய்தியாளர்களுக்கு தெரிய கூடாது என மறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.