Keerthy Suresh: லிப் லாக் காட்சியில் நடிக்க நோச்சொன்ன கீர்த்தி சுரேஷ்.. எந்த நடிகருடன் தெரியுமா?

Advertisements

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி இன்று இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். பெரிய அளவில் கவர்ச்சி இல்லாமல் நேர்த்தியாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படத்திற்காக இவருக்குத் தேசிய விருது கிடைத்தது.மேலும் சாணி காகிதம் போன்ற திரைப்படங்களில் மிகவும் போல்டான கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று அவருடைய “சைரன்” திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் நிதின் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கீர்த்தி மறுத்து விட்டதாகச் சில தகவல்கள் வெளியானது. அதுகுறித்த விளக்கத்தை இப்பொது கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் வெளியிட்ட அந்தப் பதிவில் “மிதுனுடன் மீண்டும் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவருடன் ஏற்கனவே நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். ஆனால் அந்தப் படத்தில் லிப் லாக் காட்சி இருப்பதினால் அதில் நடிக்க மறுத்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *