
குன்னத்தூரில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்குப் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராமங்களை இணைக்கும் தார் சாலைகள் அமைக்கும் பணி தொடங்குவதற்கான பூமி பூஜை நிகழச்சிக்கு கழக அம்மா பேரவை இணைச் செயலாளரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்,
J.K. S. ஜெயக்குமார், தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய கழகச் செயலாளர் தனசேகர் ஏற்பாட்டில், பூமி பூஜை செய்தும், தார் சாலைகள் அமைக்கும் பணிகளைசட்ட மன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டது.
இதேபோலக் குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளானகுள்ளத்தூர் 3வது வார்டில் சாலை அமைக்கும் பணிக்கு 10 லட்சம் மதிப்பில் பேரூராட்சி பொது நிதியின் கீழ் நடைபெறும் பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.
வெள்ளிரவெளி ஊராட்சி தேவனாம்பாளையம் சுமார் 13 லட்சம் மதிப்பில் மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி நிதியில், தார் சாலை அமைத்தல் பூமி பூஜை, நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து சின்னியம்பாளையம் ஊராட்சியில் மயானம் முதல் மந்திரி பாளையம் பிரிவுவரை சுமார் 10 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர் சம்பத் நிதியில் தார் சாலை அமைத்தல் பூமி பூஜைநடைபெற்றது.
செட்டிகுட்டை ஊராட்சி வலையபாளையம் முதல் வாஷிங்டன் சிட்டி வரை சுமார் 10 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர் சம்பத் குமார் நிதியில் தார் சாலை அமைத்தல் பூமி பூஜை செய்யப்பட்டு செட்டிகுட்டை ஊராட்சி கோபி மெயின் ரோடு முதல் கொளஞ்சிக்காடு வரைசுமார் 7 லட்சம் மதிப்பில், மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி நிதியில், தார் சாலை அமைத்தல்பூமி பூஜைநடந்தது.
இதேபோலக் குறிச்சி ஊராட்சி, வண்ணாம்பாறை முதல் அத்தப்பகவுண்டம்பாளையம் வரை சுமார் 10 லட்சம் மதிப்பில், ஒன்றிய கவுன்சிலர் மரகதமனி செல்வராஜ் நிதியியல் தார் சாலை அமைத்தல் பூமி பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சிகளில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களுக்குப் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.நிகழச்சிக்கு ஒன்றிய, நகர கழக நிர்வாகிகளும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

