176 இடங்களில் உதயசூரியன் சின்னம்..!

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்டும் அமைச்சரவையில் பதவி கேட்டும் சில கட்சிகள் போர்க்கொடி பிடித்து வந்த நிலையில் மு க ஸ்டாலின் அதிரடியாக தனது இறுதி முடிவை எடுத்து விட்டார் .
தான் எடுத்திருக்கும் தொகுதி பங்கீடு முடிவில் இருந்து எந்த வித மாற்றமும் இல்லை என கட்சி மேல் இடத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறார்.அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்ற பட்டியல் திமுக ஐடி விங்க் தரப்பிலிருந்து வெளியாகி இருக்கிறது .
வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேரடியாக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதே வேளையில் திமுக தரப்பில் நேரடியாக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன இதில் 160 தொகுதிகளில உதயசூரியன் சின்னம் நேரடியாக போட்டியிடும் என்பது உறுதியாகி இருக்கிறது.
அதே வேளையில் சில கூட்டணி கட்சிகளும் உதயசூரியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது அந்த வகையில் திமுக கூட்டணி தரப்பில் 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தரப்படுகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தொகுதிகள் மீண்டும் தரப்படுகின்றன அந்த வகையில் சென்னை ராயபுரம் வேளச்சேரி அல்லது மயிலாப்பூர் கன்னியாகுமரி மாவட்டத்திலா கள்ளியூர் விளவங்கோடு தென்காசி சிவகாசி ஓசூர் உதகமண்டலம் செய்யார் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரையில் கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தற்பொழுது கூடுதலாக இரண்டு தொகுதிகள் சேர்த்து எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன அந்த வகையில் காட்டுமன்னார்கோவில் செய்யூர் அரக்கோணம் வானூர் அரியலூர் கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
இதேபோல் புதிதாக கூட்டணி சேர்ந்திருக்கும் தேமுதிக கட்சிக்கு ஆறு தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்கப்படுகிறது தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஸுக்கு ராஜ்யசபா பதவி வழங்கும் நிலையில் தேமுதிகவிற்கு விருதுநகர் மதுரை மத்திய தொகுதி திருமங்கலம் ரிஷிவந்தியம் கள்ளக்குறிச்சி சூலூர் அல்லது மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும் ரிஷி வந்தேன் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக இடதுசாரி சிபிஎம் கட்சிக்கு ஆறு தொகுதிகளும் சிபிஐ கட்சிக்கு ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்படுகின்றன.
சிபிஎம் கட்சிக்கு கீழ்வேளூர் சென்னை திரு வி கா நகர் மதுரை தெற்கு மற்றும் திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகளும் சிபிஐ கட்சிக்கு திருத்துறைப்பூண்டி கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் மாவட்டத்தில் ஒரு  தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.
கமலஹாசனின் மக்கள் நீதி மைய கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன அந்த வகையில் கடந்த முறை கமலஹாசன் போட்டியிட்டு மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த கோவை தெற்கு தொகுதியும் சென்னையில் விருகம்பாக்கம் அல்லது மயிலாப்பூர் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.
பிற கட்சிகளுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள வாணியம்பாடி மற்றும் கடையநல்லூர் தொகுதிகள் முஸ்லிம் லீக் கட்சிக்கு தரப்படுகின்றன.இவ்வாறு திமுக தரப்பில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தீர்மானம் ஆகிவிட்டதாக தெரிகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *