பழைய ஓய்வூதிய திட்டம்  வருமா? வராதா? பரபரப்பு தகவல்..!

Advertisements
தமிழ்நாட்டில் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் கிட்டத்தட்ட 8 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இருக்கிறார்கள் .
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வு திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது .
ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தால் தங்களுக்கு பெரிய நன்மைகள் எதுவும் இல்லை எனவே பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள் . தற்பொழுது புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் பங்களிப்பு விகிதத்தில் ஒரே தொகையாக வழங்கப்படுகிறது.
கடந்த 2021தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை மாறாக அரசு ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது .
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் சுகதீப் சிங் தலைமையில் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளனர் இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுகிறது . பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து இந்த அறிக்கை தகவல் தெரிவிக்க இருக்கிறது .
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இருக்கிறார்கள் . தற்பொழுது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக வாக்கு வங்கிகள் சிதறும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது .
இதன் நிமித்தமாக பல அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் இடம் பேசும் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்  . எனவே அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு வருகிற அக்டோபர் மாதம் விடை கிடைக்கும் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *