பெற்றோரை இழந்த குழந்தைகள் கதறல் சத்தம் நிறைந்த பகுதியாக மாறிய காசா..!

Advertisements

நவீன உலகில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த செய்தி தற்போது உலக நாடுகளிடையே முப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போர் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.கடந்த 544 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 50,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1163 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, பெற்றோர் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள் என்றும், இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது. உலகம் முழுவதும் பாலஸ்தீன போர் கடுமையான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த போருக்கு தொடக்க காரணமாக ஹமாஸ் அமைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. தாக்குதல் காரணமாக பதில் தாக்குதலில் இஸ்ரேல் இறங்கியது. ஹமாஸ் அமைப்பினரை பழிவாங்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாயின. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது.

கடந்த வருடம் இதே நாளில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் போரைத் தீவிரப்படுத்தியது. ஆனால் இந்த போரில் உயிரிழந்த பால்ஸ்தீனியர்களின் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். காசாவில் வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள. மனித உரிமை உதவிகள் எட்டாத துண்டிக்கப்பட்ட பிரதேசமாகக் காசா திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் வீசும் குண்டுகளை விட உணவுத் தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுமே அம்மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புடைபடங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன. சாலா குழந்தைகள், கர்ப்பிணிகள் மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறனர்.இந்த அசாதார சூழ்நிலையில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்கள் நிர்கதியில் விடப்பட்டுள்ளனர்.பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

அதில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர்.ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கைத் தரவுகளில் படி சாலாவின் குழந்தை மிலானா காசாவில் கடந்த ஒரு வருடத்தில் போருக்கு மத்தியில் பிறந்து அவதிப்படும் 20,000 குழந்தைகளில் ஒருவள் ஆவாள். தற்கொலை எப்படி எதற்கும் தீர்வாக இருக்காதோ அதுபோல போர்களும் எதற்கும் தீர்வு கிடையாது என்பதை ஆயுதங்களை கொண்டாடும், வியாபாரம் செய்யும் மரண வியாபாரிகள் மக்களிடம் இருந்து மறைத்து வருகின்றனர். காசாவில் 23 லட்சம் மக்கள் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு மண்டலங்களில் தங்கியிருக்கும் மக்கள் மீது கூட குண்டு வீசப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. போர் நிறுத்தம் பற்றி ஓப்பந்தம் கொண்டுவரப்பட்டாலும் அதை நீட்டிக்க இஸ்ரேல் விரும்பவில்லை. எனவே போர் தொடர்ந்து வருகிறது. இது இப்படியே நீடித்தால் போரில் ஈரானும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *