Cyclone Michaung: புயல் கரையை கடந்தது!

தெற்கு ஆந்திராவில் மிக்ஜம் புயல் கரையை கடந்தது.புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

அமராவதி: வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் தீவிர புயலாக இன்று மாலை கரையை கடந்தது. தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடந்தது.

புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் அடுத்த 2 மணிநேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *