
கேரள மாநிலம் மூணாறு அருகே அந்தரத்தில் தொங்கும் உணவகத்தில் 150 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் 5 பேரைக் கயிறு கட்டி மீட்டனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ஆனைச்சாலில் தரையிலிருந்து 150 அடி உயரத்தில் அந்தரத்தில் வைத்து உணவு உண்ணும் வினோதமான உணவகம் செயல்பட்டுவந்தது. இதில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து உணவு உண்டு அழகிய மலையோரப் பகுதிகளையும் கண்டுகளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 5 பேர் உணவருந்தச் சென்ற நிலையில் இதற்கான கிரேன் திடீரெனச் செயலிழந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அந்தரத்திலேயே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கயிறு மூலம் மீட்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர்.

