
சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்றுக் கரூரில் பரப்புரை செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
இதைக் கண்டித்து, இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடத் தமிழ் மாணவர் மன்றத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டும், விஜய்க்கு எதிராகவும் முழக்கமிட்டபடி விஜயின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து நீலாங்கரையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


