Russia war:உக்ரைன் அமைதிப்பேச்சுக்கு வாய்ப்பு: ரஷ்யா செல்கிறார் அஜீத் தோவல்!

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரம் ரஷ்யா செல்கிறார். இந்தியா உதவியுடன் ரஷ்யா – உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவுடன் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரத்தில் ரஷ்யா செல்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக செல்லும் அவர், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சு நடத்துகிறார். இதன் மூலம் ரஷ்யா – உக்ரைன் போரில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *