
தேனி மாவட்டத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக, நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
தேனி மாவட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக, நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன், சென்னையிலிருந்து விமான மூலம், மதுரை வந்தார். அவருடன், அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் அவரது மனைவி குழந்தை மற்றும் தனுஷின் இரு மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் அவர்களின் பெற்றோர், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.மதுரை விமான நிலையத்திலிருந்து, அவர்களது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர். கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் மதுரை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


