
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு இயக்கமாகத் திமுக அரசு உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கற்றல் அறிவுத்திறன் அதிகரிக்க வேண்டிப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது பெருமிதமளிப்பதாகத் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு பட்டை நாமம் சாற்றுவதாகப் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அன்பில் மகேஷ், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இயக்கமாகத் திமுக அரசு உள்ளதாகத் தெரிவித்தார்.

