
புதுச்சேரி சட்டசபையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
லஞ்சம் வாங்கிய வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டு என சட்டப்பேரவையில் சிவா உள்ளிட்ட திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் இதுகுறித்து சட்டசபையில் பேச வாய்ப்பளிக்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை காவலர்கள் குண்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.



