பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாகப் பொங்கலுடன் இணைந்த 3 நாட்கள் விடுமுறை மட்டுமின்றி ஜனவரி 17-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
பண்டிகையை ஒட்டித் தொடர் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு டெல்லி, மும்பை, ஐதராபாத், சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் 6 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து ஏராளமானோர் மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வர். இதனால், சென்னை – மதுரை இடையே விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
- சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.3,999-ல் இருந்து ரூ.17,645-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.2,199-ல் இருந்து ரூ.14,337-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையிலிருந்து கோவைக்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.3,485-ல் இருந்து ரூ.16,647-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.4,199-ல் இருந்து ரூ.12,866-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,296-ல் இருந்து ரூ.17,771-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையிலிருந்து சேலத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.2,799-ல் இருந்து ரூ.9,579-ஆக உயர்ந்துள்ளது.