Karen Farquharson: டைனோசர் ஆன முதலாளி!

Advertisements

ஸ்காட்லாந்தில் வசிக்கும் பெண்மணிக்கு 37 லட்சம் இழப்பீடு கொடுத்த முதலாளி.

ஸ்காட்டிஷ் பெண்மணி ஆரென் ஃபார்குஹார்சன்  என்பவருக்கு 37 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஃபார்குஹார்சன்     1995 ஆம் ஆண்டு முதல் பொறியியல் நிறுவனமான திஸ்டில் மரைனில் பணிபுரிந்து வந்தார், அவர் ஆண்டுதோறும் 38,000 பவுண்டுகள் சம்பாதித்து வந்தார். அவர் சில நாட்களூக்கு முன்பு தன் உடல் நிலை  காரணமாகத் தான் பணியாற்றிய நிறுவனத்திடம்  ராஜினாமா  கடிதம் கொடுத்துள்ளார்.

ஆனால் பீட்டர்ஹெட், அபெர்டீன்ஷையரில் உள்ள திஸ்டில் மரைனின் நிர்வாக இயக்குனர் ஜிம் கிளார்க், ஃபார்குஹார்சனின்  பணியாற்றும்போது   மாதவிடாய் நிறுத்தத்தைக் காரணம் காட்டி  சாக்குப்போக்கு சொல்லி அடிக்கடி விடுமுறை எடுத்ததாகவும், சரியாகப் பணியைச் செய்யவில்லை  என்றும்  மருத்துவ விடுப்பை தவறாகப் பயன்படுத்தியதாக அவரது முதலாளி குற்றம் சாட்டினார்.

மேலும் பீட்டர்ஹெட், அபெர்டீன்ஷையரில் உள்ள திஸ்டில் மரைனின் நிர்வாக இயக்குனர் ஜிம் கிளார்க், ஃபார்குஹார்சனின் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல், பணியைத்  தொடருமாறு கறாராகக் கூறி ஃபார்குஹார்சனின்   ராஜினாமா கடித்தத்தை நிராகரித்தார்   என்று  கூறப்படுகிறது.

தான் பணியாற்றிய நிறுவனத்தின் நியாயமற்ற  துன்புறுத்தலைக் காரணம் காட்டி, ஃபார்குஹார்சன் நிறுவனத்திற்கு எதிராக  வழக்குத் தொடுத்தார்.  அவர் தனது 72 வயதான முதலாளியை இரக்கமற்ற அரக்கன்  சாவை எதிர்க்கும் “டைனோசர்” என்று கோபத்தில் பேசியுள்ளார்.

மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி நிறுவன இயக்குனருக்கு 37 லட்சம் ரூபாய் நஷட ஈடாக வழங்க  உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *