Meenakshi Chaudhary: விஜய்க்கு புதிய ஜோடி!

விஜய் படத்தில் ஹீரோயினாகும் மீனாட்சி சவுத்ரி.

ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தபின்னர், விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் மீனாட்சி சவுத்ரி.

இன்று திரையுலகில் டாப் நட்சத்திரங்களாக வலம் வரும் சில ஹீரோயின்கள், தங்கள் கெரியரை மாடலிங் துறையில்தான் தொடங்கி இருப்பார்கள். மிஸ் சென்னை, மிஸ் இந்தியா, சர்வதே அழகி பட்டம் ஆகியவற்றை பெற்று விளம்பர படங்களில் நடித்து இருப்பார்கள்.


தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மீனாட்சி சவுத்ரி விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து, அந்தப் படத்தில், மாடலாக வரும் இவர் கொலை செய்யப்படுவார். அதன் பின் இவரின் மரணத்தைத் தொடர்ந்தே படத்தின் கதை நகரும்.


தமிழ் படத்தில் மீனாட்சி நடித்திருந்தாலும், இவரைப் பற்றிப் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. விஜய்யுடன் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்தபிறகு, மீனாட்சியின் இன்ஸ்டா பக்கத்தைப் பலரும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். ஒரே தகவலில், தமிழ் நாடெங்கும் ஃபேமஸான மீனாட்சியின் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *