Karambakkudi: முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பெண்கள்!

Advertisements

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காகுறிச்சி ஶ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இதில் 1000 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வீரக்குடி நாட்டைச் சேர்ந்த கருக்காகுறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா வருகின்ற மே1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு இன்று கருக்காக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரு.வடதெரு, கரு.தெற்க்கி தெரு, பட்டத்திக்காடு, காளகொள்ளை, வாணக்கன்காடு பெரியாவிடுதி, கண்ணியான் கொல்லை வாண்டான் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 1000 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து மேள தாள இசை முழங்க முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று நொண்டி அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கருக்காகுறிச்சியில் அமைந்துள்ள பாளி குளத்தை மூன்று முறை சுற்றி வந்து முளைப்பாரியை பாளி குளத்தில் விட்டனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *