தவெக ஆட்சி இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்காது -மு.க.ஸ்டாலின் சாடல்..!

தவெக ஆட்சி இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூடடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, இன்றைய சூழலுக்கு ஏற்ப இளைஞரணி சமூக வலைதளங்களில் வேலை செய்து நமது கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இளைஞர் அணிக்கு ஒர்க் ஷாப் நடத்த உதயநிதிக்கு அறிவுறுத்துகிறேன் என்று கூறினார்.

தவெக வெற்றிப்பெற்றதுக்கு காரணம், சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது இல்லை என்று தெரிவித்தார். இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றும் இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது என்றும் கூறினார். குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச நாட்களில் நம்மை தேடி வருவார்கள் என்று தெரிவித்தார்.

அனைவரும் சோர்ந்து போகாமல் வேலையை பாருங்கள் என்று கட்சியினரிடையே அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *