ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி அடுத்த தலைமை மதகுருவை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்..!

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும்  நிலையில், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி அடுத்த தலைமை மதகுருவை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப்  ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி இருக்கும் இடம் தனங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் அவரை கொல்வது எங்களது நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில், தனக்குப் பிறகு யாா் தலைமை மதகுருவாக இருக்கலாம் என்பதற்கு மூவரை கமேனி பரிந்துரைத்துள்ளாா்.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேலும், அமெரிக்காவும் கொல்லத் திட்டமிடுவதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்தாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் பலத்த தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானுடன் நீண்ட காலம் போா் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராக வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கெனவே ஈரானைச் சோ்ந்த 9 அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட நிலையில், 10-ஆவதாக இசாா் தபாதபெய் கோம்ஷே என்ற அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, 3 ஈரான் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், நேரடியாக கொலை மிரட்டல் விடும் வகையில் டிரம்ப் பேசியுள்ளது,  உலக நாடுகள் இடையே மேலும் அச்சத்தை எழச்செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *